இருதரப்பினர் மோதல்: மூவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பினர் மோதல்: மூவர் மீது வழக்கு

Added : செப் 13, 2021
Share
குளித்தலை: குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி, 22. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமார், 22, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் மாலை குருமூர்த்தி வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது அங்குள்ள பொது குடிநீர் குழாய்க்கு சென்றார். முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்ட சதீஷ் குமார், அவரது தாயார் கண்ணம்மா,

குளித்தலை: குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி, 22. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமார், 22, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் மாலை குருமூர்த்தி வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது அங்குள்ள பொது குடிநீர் குழாய்க்கு சென்றார். முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்ட சதீஷ் குமார், அவரது தாயார் கண்ணம்மா, உறவினர் ராம் ஆகியோர் கடுமையாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இந்த தகராறை தடுக்க சென்ற குருமூர்த்தியின் உறவினரான லோகநாதன், மூர்த்தி ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. மூன்று பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சதீஷ்குமார், கண்ணம்மா, ராமு ஆகியோர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X