சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி கைது

Added : செப் 13, 2021
Share
Advertisement
அரியலூர்: இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம், பார்ப்பனச்சேரியைச் சேர்ந்த கண்ணன் மனைவி செல்வி என்பவருக்கும், அவரது சித்தப்பாவுக்கும் இடையே இடப் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம், 64 என்பவர், செல்வியை சந்தித்து, தான் இசைவு தீர்ப்பாய

அரியலூர்: இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், பார்ப்பனச்சேரியைச் சேர்ந்த கண்ணன் மனைவி செல்வி என்பவருக்கும், அவரது சித்தப்பாவுக்கும் இடையே இடப் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம், 64 என்பவர், செல்வியை சந்தித்து, தான் இசைவு தீர்ப்பாய நீதிபதி எனவும், இடப் பிரச்னை தொடர்பாக மாரியம்மாள் என்பவரும் மனு கொடுத்துள்ளார். எனவே, இடத்துக்கான ஆவணங்களை தர வேண்டும். இல்லா விட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இது குறித்து, அரியலூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம் செல்வி புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 19ல் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், மரியசூசை வியாகுலம் நீதிபதி இல்லை என்பதும், பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து, பார்ப்பனச்சேரியில் பதுங்கி இருந்த மரியசூசை வியாகுலத்தை நேற்று கைது செய்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X