பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் ரத்து செய்ய முடியாது

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை: ''நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும், ரத்து செய்ய முடியாது,'' என்று பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.புதுக்கோட்டையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹெச்.ராஜா கூறியதாவது: வாரணாசி பல்கலைக் கழகத்தில், மகாகவி பாரதியாருக்கு இருக்கை அமைக்கப்படும், என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி தான், உண்மையான

புதுக்கோட்டை: ''நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும், ரத்து செய்ய முடியாது,'' என்று பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.


புதுக்கோட்டையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹெச்.ராஜா கூறியதாவது: வாரணாசி பல்கலைக் கழகத்தில், மகாகவி பாரதியாருக்கு இருக்கை அமைக்கப்படும், என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி தான், உண்மையான தமிழகத் தலைவர், தேசிய தலைவர். பிரதமரின் அறிவிப்பு தான், ஒரு மொழியை வளர்க்கும் விதம். பிற மொழியை திட்டுவது, வெறுப்பு உணர்வை உருவாக்குவது தமிழ் பற்று அல்ல. உண்மையான தமிழ் பற்றாளர் பிரதமர் தான். தமிழகத்தில், தற்போது நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், பார்லிமெண்ட்டில் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் போடுவதால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அது பிரிவினைவாத செயல். சேலத்தில், ஒரு மாணவன் உயிரிழப்பு என்பது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. தேர்வுகளை கண்டு பயம் கொள்ளக் கூடாது, என்று மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை, அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு உள்ளது. இது, அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது. ஹிந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அற நிலையத்துறை சட்டத்தை மதிக்கவில்லை. அற நிலையத்துறை முறைகேடுகள் குறித்து, இரண்டொரு நாளில் ஆதாரங்களுடன் கடிதம் எழுதப் போகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X