நீட் தேர்வு எழுத சென்ற மாணவரை காரில் அழைத்து சென்ற கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு எழுத சென்ற மாணவரை காரில் அழைத்து சென்ற கலெக்டர்

Added : செப் 13, 2021
Share
திருப்பத்தூர்: வழி தெரியாமல் தவித்த, நீட் தேர்வு எழுத சென்ற மாணவரை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் காரில் அழைத்து சென்றார்.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை தென் போஸ்கோ கல்லூரியில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்காக அவர் நேற்று திருப்பத்தூர் வழியாக

திருப்பத்தூர்: வழி தெரியாமல் தவித்த, நீட் தேர்வு எழுத சென்ற மாணவரை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் காரில் அழைத்து சென்றார்.


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை தென் போஸ்கோ கல்லூரியில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்காக அவர் நேற்று திருப்பத்தூர் வழியாக பொன்னேரி வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது, ஏலகிரிமலைக்கு சென்று கொண்டிருந்த திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா, நின்று கொண்டிருந்த மாணவரிடம் விசாரித்தார். அதற்கு நீட் தேர்வு எழுத வந்ததாகவும், மையத்துக்கான வழி தெரியாமல் நிற்பதாக மாணவர் கூறினார். இதனால் மாணவர் வேடியப்பனை, கலெக்டர் தன் காரில் அழைத்து சென்று தேர்வு மையத்தில் விட்டார். சரியான நேரத்தில் அழைத்து சென்றதால் மாணவர் தேர்வு எழுதினார். விடுமுறை நாளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஏலகிரிமலைக்கு வருவர். இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நேற்று ஒரு நாள் மட்டும் ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு, கலெக்டர் அமர்குஷ்வாஹா தடை விதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X