பொது செய்தி

தமிழ்நாடு

அக்ரம் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை: டி.ஐ.ஜி., தகவல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: ''வசீம் அக்ரத்தை கொலை செய்து விட்டு, தப்பியோடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என, டி.ஐ.ஜி., பாபு கூறினார்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த வசீம் அக்ரம், 40, மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர். இவர் கடந்த, 10ல் இரவு, 7:30 மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். வேலூர் சரக டி.ஐ.ஜி., பாபு நேற்று சம்பவம் நடந்த இடத்தை

வாணியம்பாடி: ''வசீம் அக்ரத்தை கொலை செய்து விட்டு, தப்பியோடியவர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என, டி.ஐ.ஜி., பாபு கூறினார்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த வசீம் அக்ரம், 40, மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர். இவர் கடந்த, 10ல் இரவு, 7:30 மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். வேலூர் சரக டி.ஐ.ஜி., பாபு நேற்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: வாணியம்பாடி, ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தீயாஷ். கடந்த ஜூலை, 26ல் இவரது வீட்டில் இருந்து எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் தகவல் கொடுத்து, போலீசார் கைது செய்து இருக்கும் என்பதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் இம்தீயாஷ் கூலிப்படையை வைத்து, வசீம் அக்ரத்தை கொலை செய்துள்ளார். கொலையில் சென்னை ஓட்டேரி வண்டலூரை சேர்ந்த பிரசாந்த், டில்லிகுமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சுதாகர் தலைமையில், நான்கு தனிப்படை அமைத்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு வசீம் அக்ரம் உடல் நேற்று முன்தினம் மாலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், தேவராஜி, அப்துல் சமத், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X