200 அழுகிய முட்டை பறிமுதல்; இரண்டு கடைகளுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

200 அழுகிய முட்டை பறிமுதல்; இரண்டு கடைகளுக்கு அபராதம்

Added : செப் 13, 2021
Share
ஆரணி: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆரணி பகுதியில் ஆய்வு செய்து, 200 அழுகிய முட்டை, இரண்டு கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செவன் ஸ்டார் ஓட்டலில் கடந்த, 8 ல், அசைவ உணவு சாப்பிட்ட, 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதில், இரண்டு நாட்களுக்கு முன்பு லோஷினி, 10, என்ற சிறுமி

ஆரணி: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆரணி பகுதியில் ஆய்வு செய்து, 200 அழுகிய முட்டை, இரண்டு கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செவன் ஸ்டார் ஓட்டலில் கடந்த, 8 ல், அசைவ உணவு சாப்பிட்ட, 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதில், இரண்டு நாட்களுக்கு முன்பு லோஷினி, 10, என்ற சிறுமி பலியானார். இதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர், இரண்டு நாட்களாக ஆரணியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இரண்டு இறைச்சி கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். 200 அழுகிய முட்டைகள், இரண்டு கிலோ சிக்கனை பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,'' பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும். ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலையில் உள்ள ஓட்டல்களில் ஒரு மாதம் முழுமையாக சோதனை செய்யப்பட உள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X