ராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலருடன் தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்திப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலருடன் தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Added : செப் 13, 2021
Share
ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஆ.அனிதா அவர்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எம்.பாண்டுரெங்கன், மாவட்ட
ராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலருடன் தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்திப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஆ.அனிதா அவர்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எம்.பாண்டுரெங்கன், மாவட்ட செயலாளர் ஆர்.சேரன் முன்னாள் மாவட்ட நிர்வாகி ஜெ.சந்தானம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் வரவேற்பும் தெரிவித்கொண்டனர்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் டி.எஸ்.ரவி, பழனி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆ.அனிதா அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய உடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X