பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி கூலி உயர்வு: மீண்டும் பேச்சு கோவையில்நடக்கிறது: நல்லது நடக்குமா?

Added : செப் 13, 2021
Share
Advertisement
சோமனுார்:விசைத்தறி கூலி உயர்வு தொடர்பாக மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தும், பயனில்லாத நிலையில், இன்று கோவையில் மீண்டும் பேச்சு நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இத்தொழிலில், பல ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும்

சோமனுார்:விசைத்தறி கூலி உயர்வு தொடர்பாக மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தும், பயனில்லாத நிலையில், இன்று கோவையில் மீண்டும் பேச்சு நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இத்தொழிலில், பல ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கூலி குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்து வந்தனர்.கடந்த, 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை, பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரு மாவட்டங்களிலும் புதிய கலெக்டர்கள் பொறுப்பேற்றனர்.அவர்களை, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்து தீர்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தோல்விஇதையடுத்து, கடந்த இரு மாதங்களாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது.

மூன்று முறை நடந்த பேச்சுவார்த்தைகளிலும் விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், ஜவுளி உற்பத்தி யாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.இந்நிலையில், இன்று கோவையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், இணை கமிஷனர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.இதுகுறித்து இரு மாவட்டங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் நெருக்கடிகளில் தவிக்கிறோம். 60 சதவீத கூலி உயர்வு கேட்டுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், நாளை (இன்று) கோவையில் இணை கமிஷனர் முன்னிலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X