அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு விவகாரம்: அ.தி.மு.க., வெளிநடப்பு

Updated : செப் 15, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
'நீட்' தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திருப்பத்துார், வாணியம்பாடியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், 40, கடந்த 10ம் தேதி கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு, தேவையான நிதியுதவி செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ளவருக்கு, கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை
'நீட்' தேர்வு , அ.தி.மு.க., வெளிநடப்பு

'நீட்' தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:
திருப்பத்துார், வாணியம்பாடியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், 40, கடந்த 10ம் தேதி கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு, தேவையான நிதியுதவி செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ளவருக்கு, கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'நீட் தேர்வு' ரத்து செய்யப்படும் என தொடர்ந்து கூறினர்; தேர்தல் அறிவிப்பிலும் வெளியிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்: இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில், கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்து, போலீசார் சோதனை நடத்தினர். அதில், 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா குறித்த தகவலை, வாசிம் அக்ரம் தான் போலீசாருக்கு கூறியது என, இம்தியாஸ் கருதி உள்ளார். வாசிம் அக்ரம் கொலை வழக்கில், வண்டலுாரைச் சேர்ந்த பிரசாத், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த டில்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'நீட்' தேர்வு தொடர்பாக, சட்ட மசோதா தாக்கல் செய்ய உள்ளோம். இதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்று, நிறைவேற்றி தர வேண்டும்.

பழனிசாமி:
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவன் குடும்பத்தினருக்கு,
தகுந்த நிதியுதவி வழங்க வேண்டும்.தொடர்ந்து அவர், அரசு தொடர்பாக கூறிய வார்த்தைகளை, சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.அதன்பின், முதல்வர் பேசியதாவது:
பழனிசாமி முதல்வராக இருந்தபோது தான், நீட் தேர்வு தமிழகத்தில் முதன்முதலில் நடத்தப்பட்டது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள்; இப்போதும் இருக்கிறீர்கள். குடியுரிமை சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என அ.தி.மு.க., நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்த தெம்பு, திராணி இல்லை. அதை செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவுக்கு விலக்கு கிடைத்திருக்கும். நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க, இந்த அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.


பா.ஜ., வெளிநடப்பு


சட்டசபையில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது; பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.அப்போது சபையில் நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: 2021ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்: நீட் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை சபை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மக்கள் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக, நீட் தொடர்பாக, தற்போது இந்த அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறோம்.
முதல்வர்:மசோதாவை வரவேற்பதாக எதிர்க் கட்சி தலைவர் கூறியுள்ளார். அவருக்கு நன்றி.
பா.ஜ., - நயினார் நாகேந் திரன்: நீட் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த சட்ட மசோதாவை எதிர்த்து, பா.ஜ., வெளிநடப்பு செய்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-செப்-202113:53:25 IST Report Abuse
Vena Suna ஏழைகளுக்கான வரப்பிரசாதம் இந்த நீட் தேர்வு இதனை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் அது என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல் அதனை எழுதினால் தேர்வடையை மாட்டோம் என்ற அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர் இட ஒதுக்கீடு என்று வைத்துக்கொண்டு அதிலேயே ஓசி சோறு சாப்பிட்ட சிலரால் இந்த நீடு தேர்வை பாஸ் செய்ய முடியாது
Rate this:
Cancel
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-202111:45:17 IST Report Abuse
krishsrk "நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவன் குடும்பத்தினருக்கு,தகுந்த நிதியுதவி வழங்க வேண்டும்." என்ன ஒரு முட்டாள் தனமான வழக்கு. ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் குடும்பத்திற்கு ஏன் நிதி உதவி செய்யவேண்டும்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
14-செப்-202110:46:39 IST Report Abuse
ramesh நிட்டை ஆதரித்து தமிழ்நாட்டில் வரவழைத்து விட்டு தற்போது தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் வெளிநடப்பு .உலகநடிப்புடா சாமி
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
14-செப்-202117:18:58 IST Report Abuse
Srinivas....தினமும் வருவானுங்க...கேண்ட்டீன்ல சாப்பிட்டுட்டு வெளிநடப்பு செய்துவிட்டு வீட்டுக்கு போய்டுவானுங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X