சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்சிப்புளி அருகே தென்னந்தோப்பில் தீ

Added : செப் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 தென்னைகள் கருகின. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.சாத்தக்கோன்வலசை கிராமத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு தென்னந்தோப்பிற்குள் கிடந்த தென்னை மட்டை, நார், ஓலைகளில் யாரோ தீ வைத்தனர். இந்த தீ தோட்டம் முழுவதும் பரவியது. மாலை 5:00 மணி வரை மண்டபம், ராமேஸ்வரம் தீயணைப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 தென்னைகள் கருகின. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.

சாத்தக்கோன்வலசை கிராமத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு தென்னந்தோப்பிற்குள் கிடந்த தென்னை மட்டை, நார், ஓலைகளில் யாரோ தீ வைத்தனர். இந்த தீ தோட்டம் முழுவதும் பரவியது. மாலை 5:00 மணி வரை மண்டபம், ராமேஸ்வரம் தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்க போராடினர்.தொடர்ந்து தென்னை தும்பு, ஓலைகளில் காற்றின் வேகத்தால் தீ பரவியதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த விபத்தில் 30 தென்னை மரங்கள் கருகின. தோட்டத்திற்கு வெளியே நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டிருந்த தென்னை நாரில் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சிரமப்பட்டு ஓட்டினர். காற்றின் வேகம் குறையாததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X