ஆதார் மையம் மூடல்; பொதுமக்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் மையம் மூடல்; பொதுமக்கள் முற்றுகை

Added : செப் 13, 2021
Share
திருவாடானை : ஆதார் சேவை மையம் திறக்காததால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் ஆதார் கார்டு இ சேவை மையத்தில் தினமும் 40 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு எடுக்கப்படுகிறது. நேற்று வழக்கம் போல் மையத்திற்கு மக்கள் சென்ற போது பூட்டப்பட்டிருந்தது. மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறையினர் அவர்களுடன்

திருவாடானை : ஆதார் சேவை மையம் திறக்காததால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் ஆதார் கார்டு இ சேவை மையத்தில் தினமும் 40 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு எடுக்கப்படுகிறது. நேற்று வழக்கம் போல் மையத்திற்கு மக்கள் சென்ற போது பூட்டப்பட்டிருந்தது. மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வருவாய்த்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆதார் மையத்தில் பணிபுரியும் இரு பெண் ஊழியர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால்வரவில்லை. ஆகவே டோக்கன் வாங்கிய அனைவரும் மறுநாள் வரலாம் என்று தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X