சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகன் தற்கொலை; 4 பேர் மீது வழக்கு  

Added : செப் 13, 2021
Share
Advertisement
தொண்டி : தொண்டி அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 60, மகன் பாக்கியராஜ் 38, இருவரும்தொண்டி அருகே முறிசிலான் தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பாக்கியராஜ் பாக்கெட்டிலிருந்த கடிதத்தை தொண்டி போலீசார் கைப்பற்றினர்.அதில்

தொண்டி : தொண்டி அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 60, மகன் பாக்கியராஜ் 38, இருவரும்தொண்டி அருகே முறிசிலான் தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பாக்கியராஜ் பாக்கெட்டிலிருந்த கடிதத்தை தொண்டி போலீசார் கைப்பற்றினர்.அதில் பாக்கியராஜ் எழுதியுள்ளதாவது:எனது தந்தை சின்னமுனியாண்டி இறந்து விட்டார். எனது தம்பியுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம்.

தம்பி மனைவி வேறு நபருடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவார். ஆகவே அவரின் நடத்தையை கண்டித்தேன். நான் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக என் மீது வீண்பழி சுமத்தினார்.அவருடன் சேர்ந்து சிலர் எங்களை தாக்கினர். ஆகவே நானும் எனது தாயாரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்களது இறப்பிற்கு தம்பி மனைவி உட்பட நான்கு பேர் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X