உழவர் சந்தையில் கடை போட மொபைல் போன் எண் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் கடை போட மொபைல் போன் எண் அறிவிப்பு

Added : செப் 13, 2021
Share
காஞ்சிபுரம் : உழவர் சந்தைகளில், இலவசமாக கடை போட விரும்பும் விவசாயிகளுக்கு, மொபைல் போன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் முகமது ரபிக் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு உழவர் சந்தைகள் உள்ளன. இதில், உழவர் சந்தை அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, உழவர் சந்தைகளில் இலவசமாக அனுமதி அளிக்கப்படும்.கடைகளுக்கு,

காஞ்சிபுரம் : உழவர் சந்தைகளில், இலவசமாக கடை போட விரும்பும் விவசாயிகளுக்கு, மொபைல் போன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது

.இதுகுறித்து, காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் முகமது ரபிக் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு உழவர் சந்தைகள் உள்ளன. இதில், உழவர் சந்தை அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, உழவர் சந்தைகளில் இலவசமாக அனுமதி அளிக்கப்படும்.கடைகளுக்கு, வாடகை கிடையாது. இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள் விளைப்பொருட்களை, உழவர் சந்தைகளில் விற்பனை செய்து கொள்ளலாம்.உழவர் சந்தைகளில் கடை போட விரும்பும் விவசாயிகள், காஞ்சிபுரம் -79040 19761, குன்றத்துார் -80560 84375, படப்பை மற்றும் சுங்குவார்சத்திரம்- 97911 83980 ஆகிய மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X