பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம்: ஆணையர் அதிரடி

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி நகராட்சியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால், அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் ப்ரீத்தி எச்சரித்து உள்ளார்.திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, பைபாஸ், ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை உட்பட பல்வேறு இடங்களில், போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாகவும் அரசியல்வாதிகள், தனியார் நிறுவனத்தினர், வியாபாரிகள்

திருத்தணி : திருத்தணி நகராட்சியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால், அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் ப்ரீத்தி எச்சரித்து உள்ளார்.

திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, பைபாஸ், ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை உட்பட பல்வேறு இடங்களில், போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாகவும் அரசியல்வாதிகள், தனியார் நிறுவனத்தினர், வியாபாரிகள் மற்றும் பிறந்த நாள், திருமண வாழ்த்து போன்ற பிளக்ஸ் பேனர் வைத்து வருகின்றனர்.கடந்த வாரம் பேனர் வைத்திருந்தவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் எச்சரித்து உடனடியாக அகற்ற வேண்டும் என, அறிவுறுத்தினர்.

மேலும், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மீண்டும் சிலர் பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் ப்ரீத்தி கூறியதாவது:நகராட்சி எல்லைக்குள் பேனர் வைப்பவர்கள் வருவாய் மற்றும் போலீஸ் துறையிடம் அனுமதி பெற்று அந்த கடிதத்தை எங்கள் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.மேலும், பேனர் வைப்பதற்கான தொகையை செலுத்திய பின், ஒரிரு நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.மேற்கண்ட துறை அலுவலர்களிடம் இருந்து அனுமதியின்றி நகராட்சி எல்லைக்குள் பேனர்கள் வைத்தால் அபராதம் விதிப்பதுடன், தேவைப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X