பொது செய்தி

இந்தியா

கேரளாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021
Share
Advertisement
மூணாறு: கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 15,058ஆக குறைந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 91,885 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 15,058 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.39ஆக இருந்தது. 28,439 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 99 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 22,650ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 2,08,773 பேர்

மூணாறு: கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 15,058ஆக குறைந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 91,885 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 15,058 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.39ஆக இருந்தது. 28,439 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.



latest tamil news




கடந்த சில நாட்களில் கொரோனாவால் 99 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 22,650ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 2,08,773 பேர் சிகிச்சையிலும், 6,90,219 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.திருச்சூர் மாவட்டத்தில் 2158, கோழிகோடு 1800, எர்ணாகுளம் 1694, திருவனந்தபுரம் 1387, கொல்லம் 1216, மலப்புரம் 1199, பாலக்காடு 1124, ஆலப்புழா 1118, கோட்டயம் 1027, கண்ணூர் 814, இடுக்கி 501, வயநாடு 445, பத்தனம்திட்டா 381, காசர்கோடு 194 பேர் பாதிக்கப்பட்டனர்.


latest tamil news



மாநிலத்தில் ஞாயிறு தவிர பிற நாட்களில் 1.5 லட்சம் அதிகமாக மாதிரிகள் பரிசோதிக்கப்படும். அந்த எண்ணிக்கை ஞாயிறு தோறும் வெகுவாக குறையும். அதன்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று குறைந்தது குறிப்பிடதக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X