சில வரி செய்திகள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
ராஜிவ் சக்சேனா கைதுபுதுடில்லி: வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜிவ் சக்சேனா, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 2019ல் கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்ட அவரிடம், தீவிர விசாரணை நடந்தது. மார்ச்சில் சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்
 சில வரி செய்திகள்

ராஜிவ் சக்சேனா கைது

புதுடில்லி: வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜிவ் சக்சேனா, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 2019ல் கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்ட அவரிடம், தீவிர விசாரணை நடந்தது. மார்ச்சில் சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஜாமினில் இருக்கும் சக்சேனா, வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மனுவை விசாரிக்க சம்மதம்புதுடில்லி: டில்லியில் துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அந்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுஉள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.

கையெறி குண்டுகள் செயலிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மக்கள் அதிகம் கூடும் பரிம்போரா - பந்தசவுக் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு மணல் மூட்டையை சோதனை செய்தபோது, அதில் ஆறு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த சீன கையெறி குண்டுகளை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர், அவற்றை செயலிழக்கச் செய்தனர்.

கோவாவில் 5 நாள் தனிமை

பனாஜி: கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் வைத்து கோவாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை மற்றும் படிப்பிற்காக கேரளாவில் இருந்து கோவாவுக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தி தங்க வைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் 4 பேர் பலி

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ மீது, கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த வர்ஷா வலேச்சா, 51, ஆர்த்தி வலேச்சா, 41, மற்றும் ராஜ் வலேச்சா, 12, என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நடிகர் நவ்தீப் ஆஜர்

ஐதராபாத்: தெலுங்கானாவில் 2017ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். பின், இதில் தெலுங்கு திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. போதைப் பொருளை கடத்தி வினியோகிக்க சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து திரைத்துறை பிரபலங்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஐதராபாதில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், பிரபல நடிகர் நவ்தீப் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X