பள்ளி, அலுவலக நேரத்தில் போதிய பஸ் இன்றி படிக்கட்டில் ஆபத்தான பயணம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் பள்ளி, அலுவலக நேரத்தில் போதிய பஸ்கள் இன்றி கூட்டநெரிசலிலும், ஆபத்தான முறையில் படிகளில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன, அனைத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன.இதன் காரணமாக பள்ளி,
 பள்ளி, அலுவலக நேரத்தில் போதிய பஸ் இன்றி படிக்கட்டில் ஆபத்தான பயணம்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் பள்ளி, அலுவலக நேரத்தில் போதிய பஸ்கள் இன்றி கூட்டநெரிசலிலும், ஆபத்தான முறையில் படிகளில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்கின்றனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன, அனைத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன.இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செயல்படும், முடியும் நேரங்களில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குவிகின்றனர்.

ஆனால் போதிய பஸ்கள் இல்லாதாதால் கொரோனா விதிமுறை பின்பற்றாமல் பஸ்சில் போட்டிபோட்டு பயணிகள் ஏறுகின்றனர். முகக்கவசம்அணியாமலும், சமூகஇடைவெளியை பின்பற்றுவதும் இல்லை. குறிப்பாக கமுதி, முதுகுளத்துார், சாயக்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.

இதன் காரணமாக தனியார் பஸ்களில் ஆபத்தானமுறையில் படிகளில் செல்கின்றனர். தேவை உள்ள பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X