சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரத்த அபிஷேக ரசிகர்கள்: நடவடிக்கை கோரி புகார்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை-'ரஜினி படத்திற்கு சிறுவர்கள் முன்னிலையில் ஆடு வெட்டி, ரத்த அபிஷேகம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.டி.ஜி.பி., அலுவலகத்தில், பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்துள்ள புகார்:ரஜினி நடித்துள்ள, அண்ணாத்த என்ற புதிய படத்தின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டது. அதையொட்டி, ரஜினியின்

சென்னை-'ரஜினி படத்திற்கு சிறுவர்கள் முன்னிலையில் ஆடு வெட்டி, ரத்த அபிஷேகம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி., அலுவலகத்தில், பால் முகவர் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்துள்ள புகார்:ரஜினி நடித்துள்ள, அண்ணாத்த என்ற புதிய படத்தின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டது. அதையொட்டி, ரஜினியின் படத்தை சட்ட விரோதமாக, 'கட் அவுட்'டாக வைத்து, அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவர்கள் சூழ, ஆடு ஒன்றை கொடூரமாக வெட்டி, ரஜினியின் கட் அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் செய்துஉள்ளனர்; 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர்.

இது, ஆயுத கலாசாரத்திற்கு வழி வகுப்பதுடன், சிறுவர்களிடம் வன்முறை எண்ணத்தை துாண்டும்.இந்தக் கலாசாரத்தை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும். இல்லையேல், ஆடு, மாடு, கோழி என பலி கொடுக்க துவங்கி விடுவர். தியேட்டர்கள் முன் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும். வணிக ரீதியாக, ஆடு, மாடு போன்ற பிராணிகளை பொது இடங்களில் பலியிடவோ, துன்புறுத்தவோ கூடாது என சட்டம் அமலில் இருக்கும் போது, ஆட்டை வெட்டி அபிஷேகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X