ஆர்.டி.ஓ., அலுவலகத்தை வி.ஏ.ஓ.க்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகத்தை வி.ஏ.ஓ.க்கள் முற்றுகை

Added : செப் 13, 2021
Share
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை வி.ஏ.ஓ.,க்கள் நேற்று முற்றுகையிட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரண்டு தாலுகா உள்ளன. இங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன், கொரோனா தடுப்பூசி குறித்து, சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்த, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் அழைப்பு

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை வி.ஏ.ஓ.,க்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரண்டு தாலுகா உள்ளன. இங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன், கொரோனா தடுப்பூசி குறித்து, சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்த, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த கூட்டத்திற்கும், குன்றத்துாரில் நடந்த கூட்டத்திற்கும், ஆர்.டி.ஓ., முத்துமாதவன் சரியான நேரத்திற்கு சென்ற நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.தாமதமாக வந்தவர்கள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் 'மொமோ' வழங்கப்படும் என, ஆர்.டி.ஓ., முத்துமாதவன் கூறியுள்ளார்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்களின் உதவியாளர்கள் என, 250க்கும் மேற்பட்டோர், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.அப்போது, வி.ஏ.ஓ., க்களை, ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தரக்குறைவாகவும், அதிகாரதோணியில் பேசுவதாகவும், மேலும், பழி வாங்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர்.இதுகுறித்து, அலுவலகத்திற்கு வந்த ஆர்.டி.ஓ.,முத்துமாதவனை சூழ்ந்து, வி.ஏ.ஓ.,க்கள் முறையிட்டனர்.பேச்சுக்கு பின், வி.ஏ.ஓ.,க்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X