பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பரிதாப நிலையில் யாஷிகா!'பிக்பாஸ்' வாயிலாக பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், 'போட்டோ ஷூட்'டால் சமூக வலைதளங்களில் எண்ணற்ற ரசிகர் களை பெற்றார்; புதுப்படங்களிலும் ஆர்வமாக நடித்து வந்தார். இந்நிலையில், மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கிய இவர், தோழியை பறிகொடுத்ததோடு, தற்போது படுத்த படுக்கையிலேயே இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.முன்னர்
 சினிபிட்ஸ்

பரிதாப நிலையில் யாஷிகா!'பிக்பாஸ்' வாயிலாக பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், 'போட்டோ ஷூட்'டால் சமூக வலைதளங்களில் எண்ணற்ற ரசிகர் களை பெற்றார்; புதுப்படங்களிலும் ஆர்வமாக நடித்து வந்தார். இந்நிலையில், மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கிய இவர், தோழியை பறிகொடுத்ததோடு, தற்போது படுத்த படுக்கையிலேயே இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.முன்னர் போல நடமாட ஆறு மாதங்களாகும் என்ற நிலையில் உள்ள அவர், தன் தாய் மற்றும் செல்லநாய் குட்டியுடன் உள்ள படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, 'என் வலிமை' என்று குறிப்பிட்டுள்ளார்.வாழ்த்திய கிரிக்கெட் வீரர்இயக்குனர் பாண்டிராஜை வாழ்த்தி நடிகரும், கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங்கின் 'டுவிட்டர்' பதிவு: 'குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க காரணம் ஆண்களா; பெண்களா' என்று சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடத்தினால், அதில், 'பாண்டிராஜ்' என்ற இன்னொரு தேர்வையும் தர வேண்டும். அந்த அளவுக்கு உறவுகளோட அருமை, பெருமையை எடுத்துகாட்டும் பாண்டிராஜ் சாருக்கு வாழ்த்துகள், நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கு பாண்டிராஜ், 'உங்களுக்கும், உங்கள் தமிழ் வாத்தியாருக்கும் ரொம்ப நன்றி' என்று பதில் அளித்துள்ளார்.மூன்று மொழியில் 'பார்டர்'அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா நடித்த, பார்டர் படத்தின் முன்னோட்டத்தை சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து வெளியிட்டுள்ளனர். படத்தை விஜய ராகவேந்திரா தயாரிக்க, 11:11 புரொடக் ஷன் சார்பில், டாக்டர் பிரபுதிலக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடுகிறார்; அறிவழகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் புலனாய்வு அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். இதற்காக கடுமையான பயிற்சி மற்றும் ஒத்திகையும் அவர் எடுத்திருந்தார். அருண் விஜய் ஜோடியாக ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார். ரெஜினா கசாண்டராவும் சண்டை போட்டு அசத்தியுள்ளார்.நாயகனான ஸ்ரீராம் பிரபுதேவாவிடம் உதவியாளராக இருந்த கலைமாமணி இயக்கும் புதிய படத்தில், 'கோலிசோடா' புகழ் ஸ்ரீராம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகி ப்ரீத்தி. படத்தின் துவக்க பூஜையில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ''இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகிறது,'' என்கிறார் இயக்குனர் கலைமாமணி. 'ஹாட்'டாக்கிய நடிகைதமிழில், தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, பாலிவுட்டில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து பெயர் பெற்றார். சில படங்களில் கவர்ச்சி காட்ட தயங்காத இவர், சமூகவலைதளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட தவறுவதில்லை. சமீபத்தில் நீச்சல் உடையில், இவர் பகிர்ந்த படங்கள் சமூகவலைதளத்தை சூடேற்றி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X