பொது செய்தி

தமிழ்நாடு

நான்குவழி சாலை விரிவாக்க பணி; கேபிள் இணைப்பு சேதம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்குவழி சாலை விரிவாக்க பணியில், சேதமடைந்த அரசு மற்றும் தனியார் தொலைபேசி கேபிள் இணைப்புகளை சரி செய்யும் பணியில், சம்பந்தப்பட்ட துறையினர் துவக்கி உள்ளனர்.சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய இருவழி சாலை உள்ளது. இரண்டாம் கட்டம்இச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும்
 நான்குவழி சாலை விரிவாக்க பணி;  கேபிள் இணைப்பு  சேதம்

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்குவழி சாலை விரிவாக்க பணியில், சேதமடைந்த அரசு மற்றும் தனியார் தொலைபேசி கேபிள் இணைப்புகளை சரி செய்யும் பணியில், சம்பந்தப்பட்ட துறையினர் துவக்கி உள்ளனர்.

சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய இருவழி சாலை உள்ளது. இரண்டாம் கட்டம்இச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்பணி, 2015ல் துவங்கி, 2018ல் முடிந்தது. இதையடுத்து, 2018ல், இரண்டாம் கட்டமாக, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.சாலை விரிவிற்கு, கையகப்படுத்திய நிலங்களில், அகற்றவிருக்கும் மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.

அந்த வரிசையில், நெடுஞ்சாலை துறை கணக்கில் இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு, அத்துறையினர் 2019ம் ஆண்டு கணக்கெடுத்து வரிசை எண்களை எழுதினர்.ஏப்ரல் மாதம், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஓரமிருக்கும் புளிய மரங்களை அகற்றி, தடுப்பு அமைத்தனர்.இதையடுத்து, குதிரைகால்மடுவு, கம்பன் கால்வாய், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, பள்ளூர் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, தரைப்பாலங்களின் அருகே, மண் மாதிரிகள் சேகரித்தனர்.தொலைபேசி கேபிள்சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு, வடி கால்வாய் வசதி அமைத்தனர். அப்போது, தனியார் மற்றும் அரசு தொலைபேசி கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.அதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேற்று, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி, இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X