பொது செய்தி

தமிழ்நாடு

அடர்வனம் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ஜோதிபுரத்தில் அடர்வனம் வளர்ப்புத் திட்டத்தில், 3,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கியுள்ளன.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு, உட்பட்ட மருதுார் ஊராட்சியில் ஜோதிபுரம் உள்ளது. இங்கு அரசுக்குச் சொந்தமான காலியிடங்களில், அடர்வனம் வளர்ப்பு திட்டத்தில், 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நேற்று 750 மரக்கன்றுகள்
 அடர்வனம் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

மேட்டுப்பாளையம்:ஜோதிபுரத்தில் அடர்வனம் வளர்ப்புத் திட்டத்தில், 3,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கியுள்ளன.காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு, உட்பட்ட மருதுார் ஊராட்சியில் ஜோதிபுரம் உள்ளது. இங்கு அரசுக்குச் சொந்தமான காலியிடங்களில், அடர்வனம் வளர்ப்பு திட்டத்தில், 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நேற்று 750 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறியதாவது:மருதுார் ஊராட்சியில் உள்ள காலி இடங்களில், அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு, ஊராட்சி முழுவதும் பசுமை பூமியாக மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக ஜோதிபுரத்தில், அடர்வனம் திட்டத்தில், மரங்கள் வளர்க்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில், பல்வேறு வகையை சேர்ந்த, 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கியுள்ளன.
முதல்கட்டமாக, 750 மரக்கன்றுகள் ஜோதிபுரம் குடியிருப்புப் பகுதி அருகே உள்ள, காலி நிலங்களில் நடும் பணிகள் நடைபெறுகின்றன.இக்கிராமத்தின் அருகே, இரண்டு இடங்களில், 2,250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. ஊராட்சியில் காலி இடங்களில் மரக்கன்றுகள் தொடர்ந்து நடப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், துணைத்தலைவர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X