பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கியம் மேம்பட அதிகாலை துயில் எழு!

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:உடல் ஆரோக்கியமாக இருக்க, அதிகாலையில் எழுவதுடன், உணவை முறைப்படுத்துவது அவசியம் என, ஆரோக்கியம் குறித்த முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி கோயில் மண்டபத்தில், பிரகதி சேவா அறக்கட்டளை மற்றும் தென்தமிழ்நாடு சேவாபாரதி ஆகியன சார்பில், ஆரோக்கிய நண்பன் பயிற்சி திட்டம் குறித்த முகாம் நடந்தது.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம்
 ஆரோக்கியம் மேம்பட அதிகாலை துயில் எழு!

பெ.நா.பாளையம்:உடல் ஆரோக்கியமாக இருக்க, அதிகாலையில் எழுவதுடன், உணவை முறைப்படுத்துவது அவசியம் என, ஆரோக்கியம் குறித்த முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி கோயில் மண்டபத்தில், பிரகதி சேவா அறக்கட்டளை மற்றும் தென்தமிழ்நாடு சேவாபாரதி ஆகியன சார்பில், ஆரோக்கிய நண்பன் பயிற்சி திட்டம் குறித்த முகாம் நடந்தது.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் ஹோமியோபதி மருத்துவர் சிவகாமி, உடல் நலம் மேம்பட பின்பற்றவேண்டிய உணவு முறைகள் குறித்து பேசினார்.அவர் பேசியதாவது:ஹோமியோபதி பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவம். நம்மைச் சுற்றியுள்ள இயற்கை மூலிகைப் பொருட்களிலிருந்து இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. அதிகாலை எழும் பழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி குறிப்பிட்ட நேரத்தில், சத்தான உணவை உண்ண வேண்டும். துரித உணவு உண்பதை தவிர்த்து, சத்தான உணவை உண்ண வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் நான்கு நாட்கள், நமது உணவில் கீரையை கண்டிப்பாக ஏதாவது, ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை, நம் குழந்தைகளுக்கும் கற்று தரவேண்டும். ஹார்மோன் பற்றாக்குறையால், 40 வயதுக்கு மேல் நடக்க முடியாமல் இருத்தல், முட்டி வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. இதற்கு, ஹோமியோபதியில் பல்வேறு மருந்துகள் உள்ளன. முருங்கைக்கீரை, சாத்துக்கொடி, மாதுளை, பப்பாளி உள்ளிட்ட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால், கால்சியம் பற்றாக்குறை என்பது நமது உடலில் இல்லாமல் போய்விடும்.துளசி இலையை உண்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மூச்சுப்பயிற்சி உடலை, சீராக வைத்துக் கொள்ள உதவும். பெண்கள் 'ஸ்கிப்பிங்' பயிற்சி மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X