பொது செய்தி

தமிழ்நாடு

பிரிவினையைத் துாண்டும் அமைப்புகள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உட்பட, 13 அமைப்புகளைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழக விவசாய சங்கத்தின், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் ரங்கசாமி தலைமையில், மருதுாரில் நடந்தது.கூட்டத்தில், அன்னுார் ஒட்டர்பாளையம் பிரச்னையில், விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய, தமிழக விவசாயிகள்

மேட்டுப்பாளையம்:விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உட்பட, 13 அமைப்புகளைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழக விவசாய சங்கத்தின், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் ரங்கசாமி தலைமையில், மருதுாரில் நடந்தது.கூட்டத்தில், அன்னுார் ஒட்டர்பாளையம் பிரச்னையில், விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய, தமிழக விவசாயிகள் சங்கத்தை, வன்கொடுமை சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், சாதிக் கலவரத்தை துாண்டுவதாகவும் கூறி, இந்த அமைப்பை தடை செய்தும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பதிமூன்று அமைப்புகள் அறிவித்துள்ளன.இந்த அறிவிப்பை, தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த அமைப்புகள், அன்னுார் ஒட்டர்பாளையம் பிரச்னையில், கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படுகின்றன.இந்த அமைப்புகள், முதலில் வெளியான வீடியோவை பார்த்து, காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்தி, விவசாயி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வைத்தன.இரண்டாவது வீடியோ வெளியானதில், கோபால்சாமி நிரபராதி என்ற உண்மையை அறிந்தும், வழக்கு ரத்து செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணமான, இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.வன்கொடுமை சட்டத்தை விவசாய சங்கம் எதிர்க்கவில்லை. ஆனால், அரசு ஊழியர்களுக்கு, இந்த சட்டம் பொருந்தக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில பொது செயலாளர் வேணுகோபால், மாவட்ட செயலாளர் கணேசன், அன்னுார் ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் காமராஜ், தேக்கம்பட்டி பாப்பம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எஸ்.பி.,க்கு நோட்டீஸ்விவசாயி கோபால்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடர்ந்தார். இவை நேற்று, உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.கோபால்சாமி சமர்ப்பித்துள்ள மனுவில், 'முழுமையான வீடியோ வெளியான பிறகும் தன் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. தன்னை தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமி மீது முறையான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை நியாயமான முறையில் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். என் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வரும் 22ம் தேதி பதிலளிக்கும்படி, கோவை ரூரல் எஸ்.பி,, அன்னுார் இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ மற்றும் கிராம உதவியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X