பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்? கணக்கெடுக்கிறது காவல்துறை

Added : செப் 13, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார், கருமத்தம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து, கணக்கெடுக்கும் பணியை, போலீசார் துவங்கியுள்ளனர்.சூலுார், சுல்தான்பேட்டை மற்றும் கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், ஸ்பின்னிங் மில்கள், பவுண்டரிகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வால்வு

சூலுார்:சூலுார், கருமத்தம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து, கணக்கெடுக்கும் பணியை, போலீசார் துவங்கியுள்ளனர்.சூலுார், சுல்தான்பேட்டை மற்றும் கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், ஸ்பின்னிங் மில்கள், பவுண்டரிகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வால்வு மற்றும் காற்றாலை உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.இவற்றில், ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இல்லை என்றால், தொழில்கள் முடங்கும் நிலை உள்ளது.இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களில் ஒரு சிலர், போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். ஒரு சிலர், தங்கள் சொந்த மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருப்பதற்காக, இங்கு வந்து தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.குற்றச்செயல்கள்ஒரு சிலர் இங்கும் தங்கள் கை வரிசையைக் காட்டி வருகின்றனர்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பது, செயின்பறிப்பு, சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு, தப்பி ஓடிவிடுகின்றனர். உச்சக்கட்டமாக கொலையும் செய்து சொந்த மாநிலங்களுக்கு, தப்பி விடுகின்றனர். இவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.மேலும், விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்கள் இறந்தால், அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதும் சிரமமாக உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தொழிலாளர்களின் முழு விபரங்களை திரட்டி ஆவணப்படுத்த, மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார்.இதையடுத்து, ஹிந்தி தெரிந்த போலீஸ்காரர் நியமிக்கப்பட்டு, கம்பெனிகளுக்கு சென்று, தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் திரட்டும் பணி, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலுார் இன்ஸ்பெக்டர் மாதையன் கூறுகையில்," வெளிமாநில தொழிலாளர்களின் முகவரி, ஆதார் எண், எந்த நிறுவனம், அவர்களது உறவினர்கள் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய முகவரி உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதுவரை, 75 நிறுவனங்களில் விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X