சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு, கடம்பத்துார்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு, கடம்பத்துார் ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் சண்முகம் பங்கேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, ஜி.பி.எப்., பணத்தை தாமதமின்றி வழங்கிடு என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட நிர்வாகிகள் கதிர்வேலன், சந்தானம், சூரியபிரகாஷ் தலைமையில், 120 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.நிலுவை தொகை, ஊதிய உயர்வு, கொரோனா கால ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., நடராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் முன், பம்ப் ஆப்பரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒன்றிய தலைவர் பழனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சந்தானம் பங்கேற்றார். இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X