சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைந்தபட்ச பென்சன் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
அன்னுார்:தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம் பேசுகையில், "பல்வேறு மாநிலங்களில், குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்கப்படுகிறது, ஆனால், தமிழக அரசு மிகக்குறைந்த பென்ஷன் தருகிறது"
 குறைந்தபட்ச பென்சன் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

அன்னுார்:தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம் பேசுகையில், "பல்வேறு மாநிலங்களில், குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்கப்படுகிறது, ஆனால், தமிழக அரசு மிகக்குறைந்த பென்ஷன் தருகிறது" என்றார்.ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ஆக 7,850 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி மற்றும் மருத்துவப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.சங்க செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் முருகசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X