பட்டு புழுவியல் படிப்பை நிறுத்த கூடாது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பட்டு புழுவியல் படிப்பை நிறுத்த கூடாது'

Added : செப் 13, 2021
Share
சென்னை-'பட்டுப் புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது; முதல்வர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு 2011ல் துவங்கப்பட்டது. பட்டுப் புழுவியல் படிப்புக்கு, மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

சென்னை-'பட்டுப் புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது; முதல்வர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு 2011ல் துவங்கப்பட்டது. பட்டுப் புழுவியல் படிப்புக்கு, மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. பட்டுப் புழுவியல் படிப்பு முடக்கப்படுவதை கண்டித்து, வனவியல் கல்லுாரியில், அப்படிப்பை படித்து வரும் மாணவர்கள் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல்கலை நிர்வாகம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால், மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. முதல்வரும், அமைச்சரும் இதில் தலையிட்டு, பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது மற்றொரு அறிக்கை:தமிழகத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் வாயிலாக, 28 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு பாராட்டுகள். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X