சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:தடாகம் ரோடு, இடையர்பாளையம் குடியிருப்பு பகுதிகளில், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றின் வரவைக் கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு உத்திகளைக் கையாண்டாலும், அவற்றை முழுமையாக, தடுக்க
 குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

பெ.நா.பாளையம்:தடாகம் ரோடு, இடையர்பாளையம் குடியிருப்பு பகுதிகளில், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றின் வரவைக் கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு உத்திகளைக் கையாண்டாலும், அவற்றை முழுமையாக, தடுக்க முடியவில்லை.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், நரசிம்மநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில், காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. இதனால், மரவள்ளிக் கிழங்கு, வாழை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. தோட்டப் பகுதியில், இரவு நேரங்களில், காட்டு பன்றிகளின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தாலும், விவசாயிகள் தோட்டத்திற்குள் புகுந்து, காட்டு பன்றியை விரட்ட, தயக்கம் காட்டுகின்றனர்.காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து தாக்குவதால், தொடை, கால் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இதுவரை தோட்டப் பகுதிகளில் மட்டுமே, இருந்து வந்த காட்டு பன்றிகளின் நடமாட்டம், நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளிலும், அதிகரிக்க துவங்கியுள்ளது. தடாகம் ரோடு, இடையர்பாளையம், தச்சன் தோட்டம் பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியில் மக்கள் கூறுகையில், 'காட்டுப்பன்றி, மனிதர்களை எதிர்த்து தாக்கும் வல்லமை உடையது. இதனால், அவற்றை விரட்ட முடியாமல் தவிக்கிறோம். மேலும், அது பாதுகாக்கப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் உள்ளதால், அவற்றை வனத்துறையினர் மட்டுமே பாதுகாப்பாக விரட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இப்பிரச்சனைக்கு, வனத்துறையினர் உரிய தீர்வு காண முன்வர வேண்டும்' என்றனர்.அன்னுாரிலும் தொல்லை!அன்னுார் அடுத்த, அல்லப்பாளையம் ஊராட்சியில், அல்லப்பாளையம், கோனார் பாளையம், ருத்திரியம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சோளம், கரும்பு, வாழை பயிரிடப்படுகிறது.கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள், கரும்பு, வாழை மற்றும் சோள பயிர்களை அழித்து வருகின்றன.இதுகுறித்து பசுமை பூமி அமைப்பின் தலைவர் ஜோதி கூறுகையில், 'காட்டுப் பன்றிகளால் அச்சத்துடன் உள்ளோம். அருகில் உள்ள குட்டையில் தங்கியுள்ள காட்டுப்பன்றிகள் கரும்பு, சோளம் ஆகிய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளோம். வனத்துறையினர், காட்டுப்பன்றிகளை இங்கிருந்து அப்புறப்படுத்தி, வனப்பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X