பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றி அகலப்படுத்த வேண்டும்: சாலைகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்த வலியுறுத்தி, சாலை பாதுகாப்பு சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க மகாசபை கூட்டம், கவுண்டம்பாளையத்தில் நடந்தது.சங்கத்தின் துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.இதில், 'கோவை மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, குனியமுத்துார் சாலைகளில் மேம்பால

பெ.நா.பாளையம்:ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்த வலியுறுத்தி, சாலை பாதுகாப்பு சங்க கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க மகாசபை கூட்டம், கவுண்டம்பாளையத்தில் நடந்தது.சங்கத்தின் துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.

இதில், 'கோவை மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, குனியமுத்துார் சாலைகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. வேலை துவங்கியதிலிருந்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மின்கம்பங்களை மாற்றாமல் பணிகள் நடக்கின்றன. வாகனங்கள் வேறு சாலைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.தற்போது, மாற்றுப் பாதைகளும் மிகவும் பழுதாகி விட்டன. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுடன், சாலையை கடக்க வேண்டியுள்ளது. இக்குறைபாடுகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக தீர்க்க வேண்டும்.மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை, கோவை மாநகராட்சி ஆகியன இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவேண்டும்.

கோவை வடக்கு நெடுஞ்சாலை துறையினர், கணபதி, மணியகாரம்பாளையம், உருமாண்டாம்பாளையம், கே.என்.ஜி.,புதுார் கணுவாய் சாலை வரை, ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.டி.வி.எஸ்., நகர் முதல் கவுண்டம்பாளையம் வரை, இடையர்பாளையத்தில் இருந்து, வடவள்ளி வரை செல்லும் சாலை, சாய்பாபா காலனியில் இருந்து கணுவாய் வழியாக, ஆனைகட்டி வரை செல்லும் சாலை ஆகியவற்றை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட, மரங்களின் தந்தை என போற்றப்படும் வி.சி. வெள்ளிங்கிரிக்கு வெள்ளக்கிணறுவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பன்னீர்செல்வம், தேவேந்திரன், ஜீவா, குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X