போலீஸ் டைரி - திருவள்ளூர்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பூசாரி மாயம் : மனைவி புகார்அதிகத்துார்: அதிகத்துார், மேட்டுகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் செழியன், 56. இப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கால் வலியால் அவதிப்பட்டு வந்த இவரை, கடந்த 10ம் தேதி உறவினர் சண்முகம் என்பவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.பின், வீடு திரும்பாததால் பல

பூசாரி மாயம் : மனைவி புகார்

அதிகத்துார்: அதிகத்துார், மேட்டுகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் செழியன், 56. இப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கால் வலியால் அவதிப்பட்டு வந்த இவரை, கடந்த 10ம் தேதி உறவினர் சண்முகம் என்பவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.பின், வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, இவரது மனைவி கனிமொழி அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பெண் தீக்குளிப்புவெங்கத்துார்: வெங்கத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகய்யா, 42. இவரது மனைவி ஆனந்தி, 38. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய இவர்களுக்கு, சத்தியநாராயணன், 16, நாராயணசாமி, 12, என, இரு மகன்கள் உள்ளனர்.சில மாதங்களாக லோகய்யாவிற்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்பத்தில் கடும் மனக்குழப்பம் நிலவி வந்தது.

இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த ஆனந்தி, நேற்று முன்தினம், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இவரது அலறலைக் கேட்டு, கணவர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மணவாள நகர் போலீசார் ஆனந்தியிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பூசாரி மாயம்: மனைவி புகார்


அதிகத்துார்: அதிகத்துார், மேட்டுகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் செழியன், 56. இப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கால் வலியால் அவதிப்பட்டு வந்த இவரை, கடந்த 10ம் தேதி உறவினர் சண்முகம் என்பவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார்.பின், வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, இவரது மனைவி கனிமொழி அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பெண் தீக்குளிப்பு

வெங்கத்துார்: வெங்கத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகய்யா, 42. இவரது மனைவி ஆனந்தி, 38. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய இவர்களுக்கு, சத்தியநாராயணன், 16, நாராயணசாமி, 12, என, இரு மகன்கள் உள்ளனர்.சில மாதங்களாக லோகய்யாவிற்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்பத்தில் கடும் மனக்குழப்பம் நிலவி வந்தது.

இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த ஆனந்தி, நேற்று முன்தினம், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இவரது அலறலைக் கேட்டு, கணவர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மணவாள நகர் போலீசார் ஆனந்தியிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X