அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே அமைச்சருக்கு எம்.பி., ராஜா கடிதம்

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - கோவை இடையே, தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தொடர்ந்து முழு அளவில் இயக்க வேண்டும் என, நீலகிரி எம்.பி., ராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு, தினமும் ஐந்து முறை, பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் பிரச்னையால் இந்த

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - கோவை இடையே, தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தொடர்ந்து முழு அளவில் இயக்க வேண்டும் என, நீலகிரி எம்.பி., ராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு, தினமும் ஐந்து முறை, பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் பிரச்னையால் இந்த ரயில் நிறுத்தப்பட்டது.கடந்த இரு மாதங்களாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவைக்கு காலை, 8:20 மணிக்கு ஒருமுறையும், கோவையிலிருந்து மாலை 5.55 மணிக்கு, மேட்டுப்பாளையத்துக்கும் என, தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.இந்த ரயில், தினமும் 5 முறை சென்று வந்தபோது, மொத்தமாக, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்தனர்.தற்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பயன் இல்லை. எனவே, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறை பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும். மேலும், தற்போது கோவைக்கு கட்டணமாக, 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இக்கட்டணத்தை, 10 ரூபாயாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-செப்-202118:13:55 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan யாரப்பா. ராஜாவைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருப்பவர்கள். இதோ இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X