அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாலையில் நிறைவேறியது நீட் எதிர்ப்பு மசோதா; அதிமுக., ஆதரவு

Updated : செப் 14, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சட்டசபையில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது; பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.அப்போது சபையில் நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: 2021ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர்: நீட் தொடர்பாக, உச்ச நீதிமன்றம்
 மாலையில் நிறைவேறியது நீட் எதிர்ப்பு மசோதா; அதிமுக., ஆதரவு

சட்டசபையில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்தது; பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

அப்போது சபையில் நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: 2021ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர்: நீட் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை சபை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மக்கள் நன்மைக்காக, முன்னேற்றத்திற்காக, நீட் தொடர்பாக, தற்போது இந்த அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவை அ.தி.மு.க., சார்பில் வரவேற்கிறோம்.

முதல்வர்: மசோதாவை வரவேற்பதாக எதிர்க் கட்சி தலைவர் கூறியுள்ளார். அவருக்கு நன்றி.பா.ஜ., - நயினார் நாகேந் திரன்: நீட் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த சட்ட மசோதாவை எதிர்த்து, பா.ஜ., வெளிநடப்பு செய்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

பா.ஜ.,வை தவிர அனைத்து கட்சிகளும், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
16-செப்-202115:58:15 IST Report Abuse
INDIAN Kumar தமிழக மாணவர்களின் திறமையை கேலி கூத்தாக்கும் மசோதா ???
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202123:30:32 IST Report Abuse
sankaranarayanan ஒருவன் தேர்வில் தேறவில்லை என்றால், அதற்குள்ள காரணங்களை அறிந்து, டியூஷன் வைத்து அவனை தேர்வு பெற செய்ய வேண்டும். அதற்காக கல்வியின் தரத்தை குறைக்கக்கூடாது. மாணாக்கணை தேர்வே இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் கூடாது. அப்படிச்செய்தால் திறமை கெட்டுவிடும். போட்டி மனப்பான்மை இருக்காது. கல்வியின் தரம் தாழ்ந்துவிடும். இதையெல்லாம் யோஜித்து நீட் தேர்விற்கு இனிமேலாவது எதிர்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது மாணவர்களை வாழவிடுங்கள் -
Rate this:
Cancel
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
14-செப்-202116:56:50 IST Report Abuse
Sriram Narashum L இரண்டு திராவிட திருடர்களும் ஒற்றுமை திருடுவதில் மட்டும் அல்ல போலிருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X