சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளி தப்பியோட்டம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : நன்னடத்தை பிணையில் விடுவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி, திடீரென தப்பி ஓடியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 23. இவர் மீது, கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர் சிறையில் இருந்தார். பழைய குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஓராண்டு

காஞ்சிபுரம் : நன்னடத்தை பிணையில் விடுவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி, திடீரென தப்பி ஓடியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 23. இவர் மீது, கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர் சிறையில் இருந்தார். பழைய குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஓராண்டு நன்னடத்தை பிணையில் வெளியில் விடுவது நடைமுறையில் உள்ளது.

அதற்காக அவர் சிறையில் இருந்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார்.நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த குற்றவாளி, திடீரென அங்கிருந்து தப்பி, வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பினார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் அவர் விலாசத்தை தேடி சென்றனர். வீட்டில் இருந்தவரை மீண்டும் அழைத்து வந்து, சிவ காஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X