சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் கழிப்பறை தொட்டி தளம் சேதம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : கோவில் எதிரே அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில், மது அருந்தும் நபர்கள், காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். குவிந்து இருக்கும் குப்பைக்கு அருகே உள்ள கழிப்பறை தொட்டியின் தளம் சேதமடைந்துள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் கிராமத்தின் கிழக்கு பகுதி யில் திரவுபதியம்மன் கோவில் வளாகம் எதிரே அமைந்துள்ளது வி.ஏ.ஓ.,

ஆர்.கே.பேட்டை : கோவில் எதிரே அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில், மது அருந்தும் நபர்கள், காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர்.

குவிந்து இருக்கும் குப்பைக்கு அருகே உள்ள கழிப்பறை தொட்டியின் தளம் சேதமடைந்துள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் கிராமத்தின் கிழக்கு பகுதி யில் திரவுபதியம்மன் கோவில் வளாகம் எதிரே அமைந்துள்ளது வி.ஏ.ஓ., அலுவலகம்.இந்த வளாகத்தில், ஏராளமான மரங்கள் உள்ளதால், பொதுமக்கள் ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். மேலும், வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் மது அருந்துபவர்கள்,காலி பாட்டில்களை அலுவலக வளாகத்தின் பின்புறம் குவித்து வைத்து உள்ளனர்.

இதனால், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.மேலும், வி.ஏ.ஓ., அலுவலக கழிப்பறை தொட்டியின் கான்கிரீட் தளம் உடைந்து இருப்பதால், கோவில் எதிரே விளையாடும் சிறுவர்கள் மற்றும் அலுவலக வளாகத்தில் மது அருந்தும் நபர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தவும், கழிப்பறை தொட்டியை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X