பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை 3 கோடி பேருக்கு இலவசம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் இரண்டு சுற்றுகளாக, குழந்தைகள், சிறார்கள், பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில், மாத்திரை வழங்கும் முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

சென்னை-தமிழகத்தில் இரண்டு சுற்றுகளாக, குழந்தைகள், சிறார்கள், பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில், மாத்திரை வழங்கும் முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும், 20 - 30 வயதுடைய பெண்களில், கருவுறாதவர்கள், பாலுாட்டாதவர்கள் ஆகியோருக்கு, இரண்டு சுற்றுகளாக, திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இந்த முகாம்களில் விடுபட்டவர்களுக்கு, 27ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும்.மாநிலம் முழுதும் 19 வயதுக்கு உட்பட்ட 2.26 கோடி பேர் பயனடைவர். அதேபோல் 20 - 30 வயதுக்கு உட்பட்ட 5௫ லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.இந்த குடற்புழு நீக்க மாத்திரை, குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்கி, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, நினைவாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் மனிஷ், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X