பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுர்வேத சக்தி மருந்து; மாணவர்களுக்கு வழங்கல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில், மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' நேற்று வழங்கப்பட்டது.சென்னையை சேர்ந்த யோகவாஹினி பவுண்டேஷன் சார்பில், கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில்,

உத்திரமேரூர் : கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில், மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான, 'ஆயுஷ் இம்யூனிட்டி கிட்' நேற்று வழங்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த யோகவாஹினி பவுண்டேஷன் சார்பில், கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியருக்கு, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆயுஷ் இம்யூனிட்டி கிட் ஆயுர்வேத மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, உத்திரமேரூர் பேரூராட்சி, மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியில், ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான அஸ்வகந்தா சுதர்சன மருந்துகள் அடங்கிய ஆயுஷ் இம்யூனிட்டி கிட் மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், சென்னை யோகவாஹினி பவுன்டேசன் சார்பில், ஆயுர்வேத மருத்துவர்கள் சுதிர் அய்யப்பன், தாமரை மணாளன் ஆகியோர், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X