அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளில் விலை பட்டியல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை-மது வகைகளின் விலையை, 'குடி' மகன்கள் தெரிந்து கொள்ளும் வகையில், டாஸ்மாக் கடைகளில், விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், பாட்டிலுக்கு 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களும் உடந்தை.இந்நிலையில், கூடுதல் விலைக்கு
 மதுக்கடைகளில் விலை பட்டியல்

சென்னை-மது வகைகளின் விலையை, 'குடி' மகன்கள் தெரிந்து கொள்ளும் வகையில், டாஸ்மாக் கடைகளில், விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், பாட்டிலுக்கு 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களும் உடந்தை.இந்நிலையில், கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அனைத்து மதுக் கடைகளிலும் விலை பட்டியல் வைக்குமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று மதுக் கடைகளில் அனைத்து மது வகைகளின் விலை விபரங்கள் அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில், கூடுதல் விலை வசூலித்தால், புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X