பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணிவதில் மாணவர்கள் அலட்சியம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், பள்ளி மாணவ - மாணவியர் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலையடுத்து, தற்போது ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளி மாணவ - மாணவியர் முக கவசம் அணிவது, சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என, பல்வேறு வழிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது பள்ளி
 முக கவசம் அணிவதில் மாணவர்கள் அலட்சியம்

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில், பள்ளி மாணவ - மாணவியர் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, தற்போது ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளி மாணவ - மாணவியர் முக கவசம் அணிவது, சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என, பல்வேறு வழிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர், முக கவசம் அணியாமல் பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருப்பது, சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளி மாணவ - மாணவியரை முக கவசம் அணிந்து வர வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். ''முக கவசம் அணியாமல் வரும் மாணவ - மாணவியருக்கு பள்ளி மூலம் முக கவசம் வழங்கி கிருமி நாசினி பயன்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X