அரசியல் செய்தி

தமிழ்நாடு

அக்., 6, 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

Updated : செப் 14, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (5+ 5)
Share
Advertisement
சென்னை ;'தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஓட்டு எண்ணிக்கை அக்., 12ல் நடைபெறும்' என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2019 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. வார்டு வரையறை பணிகள் முடியாததால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
அக்., 6, 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

சென்னை ;'தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஓட்டு எண்ணிக்கை அக்., 12ல் நடைபெறும்' என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2019 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. வார்டு வரையறை பணிகள் முடியாததால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை.


உத்தரவுநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும், மாநிலம் முழுதும் நடத்தப்படவில்லை. சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை, செப்., 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வந்தது. ஒரு மாதமாக சட்டசபை கூட்டம் நடந்து வந்ததால், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது தாமதமானது. சட்டசபை கூட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து, ஒன்பது மாவட்ட ஊரக தேர்தல் தொடர்பான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது.


கோரிக்கைஇதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியதாவது:ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்டோபர் 6, 9ல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஓட்டு எண்ணிக்கை ஒரே கட்டமாக 12ம் தேதி நடக்கும். அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஓட்டுப்பதிவு காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடத்தப்படும். மாலை 5:00 மணிக்கு பின், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அனுமதிக்கப்படுவர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே நடைமுறைக்கு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில், 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவர். அதேநேரத்தில், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளும் நடந்து வருகின்றன.
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்து, கூடுதல் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிப்பதற்கும், சிறப்பு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில், கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கையுறைகள், வெப்பமானிகள், கிருமிநாசினி, முகக் கவசம், பி.பி.இ., கிட் உள்ளிட்ட, 13 பொருட்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில், தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில், கூடுதல் தடுப்பூசியை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇரண்டு கட்ட தேர்தல் விவரம்* ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர்; 1,381 ஒன்றிய கவுன்சிலர்; 2,901 ஊராட்சி தலைவர்; 22 ஆயிரத்து, 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம், 27 ஆயிரத்து மூன்று பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது

* முதல் கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர்; 755 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்; 1,577 ஊராட்சி தலைவர்; 12 ஆயிரத்து 252 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், அக்., 6ல் தேர்தல் நடக்கிறது

* இரண்டாம் கட்டமாக 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர்; 626 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்; 1,324 ஊராட்சி தலைவர்; 10 ஆயிரத்து 329 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்., 9ல் தேர்தல் நடக்கிறது

* ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறம்; ஊராட்சி தலைவருக்கு இளம்சிவப்பு நிறம்; ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிறம்; மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன

* முதற்கட்ட தேர்தலுக்கு 7,921 ஓட்டுப்பதிவு மையங்களும்; இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 6,552 ஓட்டுப்பதிவு மையங்களும் அமைக்கப்பட உள்ளன

* முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்களும்; இரண்டாம் கட்ட தேர்தலில் 34 ஆயிரத்து 65 ஆயிரத்து 724 வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவிற்கு 41 ஆயிரத்து 500 ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் அலுவலர் பணியில், 1.10 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீதம் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.


latest tamil news

கூடுதல் பொறுப்பாளர்கள்இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள மாவட்ட வாரியா ஏற்கனவே பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், வேலூர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி., கேபாலாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
14-செப்-202117:39:44 IST Report Abuse
duruvasar தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே நாளில் வாக்குபதிவு நடக்க வேண்டும், மறுநாளே முடிவுகள் அறிவிக்கபடவேண்டும் என ஓலமிட்ட ஓநாய் கூட்டங்கள் வேற்று காடுகளுகக்கு குடிபெயர்ந்து விட்டனவா ?
Rate this:
Cancel
14-செப்-202116:22:44 IST Report Abuse
theruvasagan என்னாது. அக்டோபர் 6 உள்ளாட்சி தேர்தலா. ஏப்ரல் மாசந்தானே தமிழக ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடந்தது. மறுபடியுமா
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-செப்-202113:07:42 IST Report Abuse
Lion Drsekar வாழ்த்துக்கள் . மக்களுக்கு இந்த தேர்தலால் மேலும் சிக்கல்களும் பிரச்சனைகளும் அதிகரிக்கப்போகிறது, முன்பாவது ஒரு இடத்தை மட்டும் கவனித்தால் போதும், இப்போது வருவோர் போவோருக்கெலாம் கப்பம் கட்டவேண்டும், குறிப்பாக வியாபாரிகள் நிலைதான் மிகவும் பாவம், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X