பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருத்தணி : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேற்று அறிவியல் செய்முறை தேர்வு துவங்கியது.நாளை முதல் தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தனித்தேர்வு என, பொதுதேர்வு நாளை முதல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.பிளஸ் 1 மாணவர்களுக்கு, நாளை முதல், 30ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,

திருத்தணி : அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேற்று அறிவியல் செய்முறை தேர்வு துவங்கியது.நாளை முதல் தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தனித்தேர்வு என, பொதுதேர்வு நாளை முதல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, நாளை முதல், 30ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், நாளை மறுதினம் முதல், 28ம் தேதி வரை தனித்தேர்வு நடக்கிறது.அந்த வகையில், திருத்தணி கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தனித் தேர்வு எழுத, 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்நிலையில் நேற்று, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடந்தது.விதிமுறைகள்இதில், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் சுப்ராயன் பங்கேற்று, செய்முறை தேர்வை துவக்கி வைத்து, கொரோனா தொற்றின் அரசு விதிமுறைகள் மாணவர்கள் கடைப்பிடிக்கின்றனர் என, ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியின் போது பள்ளி ஆய்வாளர் வெங்கடேசுலு, தலைமை ஆசிரியை தெமினா கிரோனப் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X