பொது செய்தி

தமிழ்நாடு

'லொள்' தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:ருத்ராபாளையம் பகுதியில் நாய்த்தொல்லை அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே ருத்ராபாளையம் பகுதியில், 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கே விவசாயம் அடிப்படைத்தொழிலாக உள்ளது.விளைநிலங்கள் மற்றும் காடுகளுக்கு மத்தியில், இந்தக்கிராமம் உள்ளது. இதனால் இங்கே நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள்

மடத்துக்குளம்:ருத்ராபாளையம் பகுதியில் நாய்த்தொல்லை அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே ருத்ராபாளையம் பகுதியில், 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கே விவசாயம் அடிப்படைத்தொழிலாக உள்ளது.விளைநிலங்கள் மற்றும் காடுகளுக்கு மத்தியில், இந்தக்கிராமம் உள்ளது. இதனால் இங்கே நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:தெருக்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்பவர்களை குறிவைத்து தாக்குகின்றன. பலரையும் கடித்துள்ளது.டூ -வீலரில் செல்பவர்களை துரத்தியதால், நிலை தடுமாறி விழுந்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கிராமப்பகுதிக்குள் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர், கூட்டமாக திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X