பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் குறைந்தது தொற்று பாதிப்பு விகிதம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: தொடர் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசியால், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது.கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம், தமிழக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை தீவிரப்படுத்தினாலும் பாதிப்பு குறையவில்லை.மாவட்டத்தில், துடியலுார், காரமடை, சூலுார், மதுக்கரை ஆகிய வட்டாரங்களில், பாதிப்பு விகிதம், 4 - 8
கோவை, குறைந்தது கொரோனா பாதிப்பு விகிதம்

கோவை: தொடர் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசியால், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம், தமிழக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை தீவிரப்படுத்தினாலும் பாதிப்பு குறையவில்லை.மாவட்டத்தில், துடியலுார், காரமடை, சூலுார், மதுக்கரை ஆகிய வட்டாரங்களில், பாதிப்பு விகிதம், 4 - 8 என்ற அளவில் உள்ளது. மேலும், இப்பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இதை கருதி, இவ்வட்டாரங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாதிப்பு விகிதம், 2.1 என்ற அளவில் இருந்தது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மாநில சுகாதார துறையின் கொரோனா பாதிப்பு அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பாதிப்பு விகிதம், 2.0 என்ற அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த மாதங்களில் பாதிப்பு விகிதம், 1.6 - 1.8 என்றளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செலுத்திக் கொள்கின்றனர். சமூக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடுவதால் கொரோனா தொற்றுக்குள்ளானாலும், பாதிப்பு பெரியளவில் இருக்காது. இதனால் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் பாதிப்பு விகிதம் மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


கொரோனா தடுப்பூசி: நீலகிரி முதலிடம்



ஊட்டி :கொரோனா தடுப்பூசி முதல் தவணை 100 சதவீதம் செலுத்தி, நீலகிரி மாவட்டம், மாநிலத்தில் முதலிடம் பிடித்து உள்ளது.நீலகிரியில் பழங்குடியினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் செலுத்தப்பட்டது.மொத்த மக்கள் தொகையான 7 லட்சத்து 24 ஆயிரத்து 748 பேரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர். நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில், 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதன்படி, முதல் தவணை தடுப்பூசி, 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு, மூன்று மாத காலத்துக்குள் உள்ள 6,277 பேர், விதிகள்படி தடுப்பூசி செலுத்தவில்லை. கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா கூறுகையில், ''கொரோனா முதல் தவணை தடுப்பூசி, மாநில அளவில் நீலகிரியில் 100 சத
வீதம் நிறைவு பெற்று உள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-செப்-202107:49:28 IST Report Abuse
Kasimani Baskaran அரசு கோவையை அடுத்த மாநிலம் போல நடத்தாமல் இருந்தாலே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X