முக்கிய சாலைகளில் கழிவுநீர்: சுகாதாரம் பாதிப்பால் அச்சம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நகரின் முக்கிய சாலைகளில், தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது.உடுமலை நகரில், மழை பெய்தால், பழநிரோடு, பொள்ளாாச்சி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேக்கமடைகிறது. மழை ஓய்ந்த பின்னும், தண்ணீர் வடியாமல் தேங்கி விடுகிறது.இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், அவதியடைந்து வருகின்றனர். அதிவேகமாக செல்லும் இரு சக்கர
 முக்கிய சாலைகளில் கழிவுநீர்: சுகாதாரம் பாதிப்பால் அச்சம்

உடுமலை:உடுமலை நகரின் முக்கிய சாலைகளில், தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது.உடுமலை நகரில், மழை பெய்தால், பழநிரோடு, பொள்ளாாச்சி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேக்கமடைகிறது. மழை ஓய்ந்த பின்னும், தண்ணீர் வடியாமல் தேங்கி விடுகிறது.இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், அவதியடைந்து வருகின்றனர். அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, கீழே விழுந்து காயமடைகின்றனர்.அதேபோல், நகரில் முக்கிய வீதிகளில், கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் அடைப்பு, காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கல்பனா ரோட்டில், கழிவுநீர் தேங்கி நின்ற நிலையில் துர்நாற்றம் வீசியது.அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, மழை நீர் தேங்கும் பகுதிகளில், உரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மக்கள் கூறுகையில், 'நகரில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டும், முறையாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், மழைநீர் தேங்கி, சுகாதாரம் பாதிக்கிறது. நகரில், மழைநீர் தேக்கமடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X