உடைந்தது டிரான்ஸ்பார்மர்: மாற்றியமைக்காததால் அச்சம் 

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உடைந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியம் ஆண்டுக்கணக்கில் மாற்றியமைக்காமல் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.பொள்ளாச்சி ஆறுமுகம் நகர் குடியிருப்பின் கிழக்கு எல்லையில், மின்வாரிய டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் ஒன்று, உடைந்து, சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.இந்த
 உடைந்தது டிரான்ஸ்பார்மர்: மாற்றியமைக்காததால் அச்சம் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய குடியிருப்பு பகுதியில் உடைந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியம் ஆண்டுக்கணக்கில் மாற்றியமைக்காமல் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.பொள்ளாச்சி ஆறுமுகம் நகர் குடியிருப்பின் கிழக்கு எல்லையில், மின்வாரிய டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் ஒன்று, உடைந்து, சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், மின்வாரியம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.ஆண்டுக்கணக்கில் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், மழை, காற்றுக்கு சாய்ந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.உடைந்த கம்பத்தை சீரமைக்க மின்வாரியம் அலட்சியம் காட்டுவது, பொதுமக்களிடையே துறை குறித்த நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும்.மகாலிங்கபுரம் மின்வாரிய உதவிப் பொறியாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''அந்த டிரான்ஸ்பார்மருக்கு பொருந்தக்கூடிய கான்கிரீட் கம்பம் கிடைக்காமல் இருந்ததால், தாமதம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்குள் கம்பம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X