பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்... சோதனை மேல் சோதனை!ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கணும்

Added : செப் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க, அரசு 'கமிட்டி' அமைக்க வேண்டும். அதன் பிறகே, சோதனை ஓட்டம் நடத்தி, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 170.22 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க, அரசு 'கமிட்டி' அமைக்க வேண்டும். அதன் பிறகே, சோதனை ஓட்டம் நடத்தி, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டப்பணிகள், 170.22 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம், 164.98 கி.மீ., நீளத்துக்கு கழிவுநீர் குழாய்களும், 7,400 மனித ஆய்வு குழிகளும், 18 கழிவு நீரேற்று நிலையங்கள், மூன்று கழிவுநீர் உந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், 17.14 கி.மீ., துாரத்துக்கு பம்பிங் குழாய்களும், 11.25 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மாட்டு சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக, ஆள் இறங்கும் குழிகளை சுத்தம் செய்து, துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.மக்கள் அதிருப்திபணிகள் முடிவதற்குள்ளே ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளதால், இத்திட்டம் முழு பலன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பல இடங்களில் போடப்பட்ட புதிய ரோடுகள் தோண்டப்பட்டு, ஆள் இறங்கும் குழிகள் மீண்டும் உயரப்படுத்தப்படுகின்றன.

கழிவுநீர் உந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வராததால், அவற்றை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதுடன் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுபோன்ற பணிகளால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கண்காணிப்பு தேவைசமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில் கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இப்பணிகளில் உள்ள தரம் குறித்து கேள்வி எழுந்து வருகிறது.பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை எல்லாம் சீரமைக்காமல் சோதனை ஓட்டம் நடத்துவது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை.தரமின்றி தொட்டிகள் பெயரளவுக்கு மட்டும் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

கழிவுநீர் உந்து நிலையங்கள் பயன்பாடின்றி உள்ளதால் புதர் மண்டி உள்ளது.எனவே, தரம் மற்றும் பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய கமிட்டி அமைக்க வேண்டும். ஆய்வு செய்யும் கமிட்டியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க தன்னார்வலர்களையும் இணைக்க வேண்டும்.இந்த கமிட்டி ஆய்வு செய்து, சேதமடைந்த குழிகளை சீரமைக்கவும்; இதில் உள்ள குளறுபடிகள், குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பிரச்னையை களைய ஆளில்லை!
பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை பணிகள் முடிந்து விட்டதாகவும், சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. திட்டத்தில், ஆள் இறக்கும் குழிகளுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்பு கொடுக்கும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.அந்த குழாய்கள் என்ன நிலையில் உள்ளன, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை பாதையில் இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். பாதாள சாக்கடையில் குழாய்களை இணைக்கும் பணிக்கும், நகராட்சி ஒப்பந்ததாரர் எனக்கூறி, ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர்.பணம் கொடுக்காவிட்டால், இணைப்பு கொடுக்க முடியாது என்று மிரட்டி, பணம் பறிக்கின்றனர். இதுபற்றி, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்தில் புகார் தெரிவித்தாலும், நடவடிக்கை இல்லை,' என, வேதனையை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X