எக்ஸ்குளுசிவ் செய்தி

அரசின் கடனை குறைப்பது எப்படி? அமைச்சர் தியாகராஜன் விளக்கம்!

Updated : செப் 14, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
''அரசின் கடனை அடைக்க பொது சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்று, மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,'' என நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.சட்டசபையில் அவரது பதிலுரை:கருணாநிதி ஆட்சியில், 1 ரூபாய் கடன் வாங்கினால், அதையும், வருவாய் உபரியையும் சேர்த்து, 100 சதவீத கடன் முதலீட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில், 1 ரூபாய்
அரசின் கடன், குறைப்பது எப்படி, அமைச்சர் ,தியாகராஜன் விளக்கம்!



''அரசின் கடனை அடைக்க பொது சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்று, மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,'' என நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

சட்டசபையில் அவரது பதிலுரை:
கருணாநிதி ஆட்சியில், 1 ரூபாய் கடன் வாங்கினால், அதையும், வருவாய் உபரியையும் சேர்த்து, 100 சதவீத கடன் முதலீட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில், 1 ரூபாய் கடன் வாங்கினால், 50 பைசா வருவாய் பற்றாக்குறைக்கு செலவிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 50 பைசா, மூலதனத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, தொலைநோக்கு திட்டம் - 2023 கொண்டு வந்தார். அந்த இலக்கை அடைய முடியாது; இலக்கை குறையுங்கள் என்று, 2016ல் சட்டசபையில் கேட்டேன். ஆனால், நீங்கள் போடும் கணக்கு சரியில்லை என அமைச்சர்கள் அப்போது கூறினர். ஆனால், அவர்கள் கூறியது நடக்கவில்லை.


பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வருமானம் உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு. எப்படி அரசின் கடனை குறைக்கப் போகிறீர்கள் என்று எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கேட்டுள்ளனர். பொதுச் சொத்தை விற்று கடனை அடைக்க வேண்டும்; குத்தகைக்கு விடலாம். ஆனால், பொதுச் சொத்துக்களை விற்கக்கூடாது என்று, மத்திய அரசிற்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். வேறு சொத்துக்கள் இருக்கிறது; தேவைப்படும் நேரத்தில், அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
14-செப்-202120:05:05 IST Report Abuse
gopalasamy N தி மு க அரசை நீக்கி செலவினம் குறைதல் மட்டுமே கடன் குறைய ஒரே வழி
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
14-செப்-202119:11:30 IST Report Abuse
R.MURALIKRISHNAN நீங்கள் பதவி வகித்த வெளிநாட்டு கம்பனிகளின் நிலை என்ன என்று மக்கள் அறிவர் அமைச்சரே
Rate this:
Cancel
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
14-செப்-202117:51:46 IST Report Abuse
rajan_subramanian manian கோவில் சொத்தை மீட்பது,பிற்பாடு ஆட்டையைப்போடுவதற்குத்தான் என்று நன்றாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X