சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., 'மாஜி' எம்.பி.,யின் பேரன் வெட்டி கொலை

Added : செப் 13, 2021
Share
Advertisement
ராசிபுரம்-தி.மு.க., முன்னாள் எம்.பி.,யின் பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜி.பி.சோமசுந்தரம். இவர் தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர். இவரது பேரன் ராஜேந்திரன், 58; விவசாயி.ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ் என்ற மகனும், சுபி என்ற மகளும் உள்ளனர்.சுரேஷ் திருமணமாகி தனியாக

ராசிபுரம்-தி.மு.க., முன்னாள் எம்.பி.,யின் பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜி.பி.சோமசுந்தரம். இவர் தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர். இவரது பேரன் ராஜேந்திரன், 58; விவசாயி.ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ் என்ற மகனும், சுபி என்ற மகளும் உள்ளனர்.சுரேஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். சுபிக்கு ஆறு மாதங்களுக்கு முன் திருமணமானது. கடந்த வாரம், தன் நிலத்தின் ஒரு பகுதியை ராஜேந்திரன் விற்பனை செய்தார். இதற்கு மகள், மருமகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சுகுணாவை தாக்கி, கட்டிலில் படுத்திருந்த ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் விசாரித்தார். சந்தேகத்தின்படி, உறவினர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய கூலிப்படையிடம், பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X