சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆசிட்' குடுவை உடைந்து 4 மாணவியர் படுகாயம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம்-அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் குடுவை உடைந்து, நான்கு மாணவியர் படுகாயம் அடைந்தனர்.விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிக்காக, விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கேட்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக, கண்டமங்கலத்தில் சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.வேதியியல் ஆய்வகம்இந்த சாலையில்

விழுப்புரம்-அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் குடுவை உடைந்து, நான்கு மாணவியர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிக்காக, விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கேட்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக, கண்டமங்கலத்தில் சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.வேதியியல் ஆய்வகம்இந்த சாலையில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் ஆய்வகம், 'கம்ப்யூட்டர்' அறை, கலையரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.

இதற்காக, கட்டடத்தில் உள்ள வாயில் மற்றும் ஜன்னல் கதவுகளை பெயர்த்து அகற்றும் பணி நடக்கிறது.நேற்று காலை 9:00 மணியளவில் பிளஸ் 2 மாணவியர் பாமா, ஆதிஷா, ஜனனி, நித்யா ஆகியோர் ஆய்வகத்தில் இருந்து பொருட்களை வேறு கட்டடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சிலாப் மீது வைக்கப்பட்டிருந்த, 'சல்பியூரிக் ஆசிட்' குடுவை கீழே தவறி விழுந்தது. இதில் ஆசிட் மாணவியர் மீது தெறித்தது. பாமா முகத்தில் காயம் ஏற்பட்டு கண் பாதிக்கப்பட்டது. மற்ற மாணவியருக்கு கை, கால் மற்றும் முதுகு, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.மாணவியரை அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி பாமாவை மேல் சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முயன்றனர்.

ஆனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.'சஸ்பெண்ட்'உரிய பாதுகாப்பு இன்றி, ஆபத்தான உபகரணங்களை இடமாற்றம் செய்ய மாணவியரை பயன்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராமை, 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., கிருஷ்ண பிரியா உத்தரவிட்டார்.வழக்குப் பதிவுஇச்சம்பவம் குறித்து மாணவி பாமாவின் தாய் சித்ரா அளித்த புகாரின்படி, கண்டமங்கலம் போலீசார், பள்ளி தலைமையாசிரியர் ராஜாராம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X