பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வர்களுக்கு செய்முறைத்தேர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 107 தனித்தேர்வர்கள், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான, தேர்வு மையம் சீனிவாசா பள்ளியில் அமைக்கப்படுகிறது.இவர்களில், 46 பேருக்கு, ஏற்கனவே, அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில், 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.அவ்வகையில்,

உடுமலை:உடுமலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 107 தனித்தேர்வர்கள், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான, தேர்வு மையம் சீனிவாசா பள்ளியில் அமைக்கப்படுகிறது.இவர்களில், 46 பேருக்கு, ஏற்கனவே, அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில், 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.அவ்வகையில், முதற்கட்டமாக, அறிவியல் பாட செய்முறைத்தேர்வு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில், நேற்று நடந்தது. தேர்வில், 43 பேர் பங்கேற்றனர். விடுபட்டவர்களுக்கு இன்று, தேர்வு நடத்தப்படவும் உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான எழுத்துத்தேர்வு, வரும் 16ல் துவங்கி, 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. தற்போது, விண்ணப்பித்தவர்களுக்கு 'ஹால்டிக்கெட்' கிடைக்கப் பெற்ற நிலையில், செய்முறைத்தேர்வு நடத்தப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X